Sunday, March 13, 2011

துரோகம்


உன்னால் தான்,
நான்,
மரங்களுக்கு துரோகம் செய்கிறேன்,
ஜெராக்ஸ் மிஷின் அருகில்,
யாருன்னை அமர சொன்னது !!!

அருகில்


நீ,
அருகில் இருந்தால் மட்டும்,
சீக்கிரம் வந்துவிடுகிறது,
நான்,
இறங்கவேண்டிய இடம் !!!

Saturday, November 7, 2009

விடியல்




வைகறையில்,
தினமும் நடப்பது,
வானத்திற்கு மட்டும் தான்!
உலகத்தின் விடியல்,
உறங்கிக்கிடக்கிறது,
ஏழைக் குழந்தையின்,
பட்டினியிலும்,
மொட்டிலேயே கருகும்,
பெண் சிசுவிலும் !!!

Saturday, October 10, 2009

துரோகம்

பள்ளி பருவத்தில்,
கல்லூரி காலத்தில்,
வாலிப வயதில்,
வரிசையாக,
பல காதல்,
பண்ணிவிட்டு,
பார்க்கும் பெண்களை,
போக பொருளாய்,
கோவலனாய் உபயோகித்து விட்டு,
கட்டுபவளை,
கண்ணகி போல்,
எதிர்பார்ப்பது !!!

கையேந்தி பவன்


சில ரூபாய்களில்,
பல ஆயிரம் வயறுகளை,
பட்டினி போடாமல்,
நிரம்ப செய்யும்,
அன்ன பாத்திரம் !!!

அற்புதம்


சில்லென்ற வானிலை!
செல்லமாய் அடிக்கும் காற்று,
சிணுங்கும் மலர்கள்!
மெல்லிய சாரல் மழை!
மாசில்லா சுவாசம்!
மலைகளின் அரசி,
மனிதருக்கோர்,
அற்புதம் தான் !!!

இந்தியா


பல நிலங்கள்,
பல நூறு பிரிவுகள்,
பல்லாயிரம் தலங்கள்,
பல லட்சம் தொழில்கள்,
பல கோடி மக்கள்,
பெருமை மிகு,
விஷயங்கள் தான்,
கட்டி காத்தவைகள்,
கட்டுண்டு,
இருக்கும் வரை !!!