Wednesday, May 13, 2009

தமிழ்

அறிமுகம் தேவையில்லை எனக்கு,
ஆதியிலே பிறந்து,
அகிலத்தின் முதன் மொழியென,
அடைமொழி பெற்றவள்!
ஆயிரமாயிரம் பாவலர்களால் அன்று,
ஆசிர்வதிக்கப்பட்டு,
அனேக பல கவிஞர்களால் இன்றும்,
ஆராதிக்கப்படுபவள்!
அமுதூறும் மழலையில் திளைத்து,
அன்னையின் தாலாட்டில் மகிழ்ந்து,
அலைபாயும் காற்றினில் மிதந்து,
அண்டமெங்கும் நிறைந்திருப்பவள்!
ஆச்சர்யம் யாதெனில்,
அரசியல்வாதிகள் பலர்,
அடம் பிடித்து போர்க்கொடி தூக்குகிறார்கள்,
அழிவிலிருந்து என்னை காப்பதற்காக,
அவர்களுக்கு தெரியுமா,
அழிவில்லை எனக்கென்று !!!

Tuesday, May 12, 2009

தோழிக்கு காதல் கடிதம்

என்ன கடிதம்,
என்று கேட்கிறாய் !
தோழியே !
இதயத்தில் மலரும் வரிகள்,
நாவில் உலர்கின்றன !
நட்பாகப் பழகும் உன்,
முகம் பார்த்து,
எப்படி சொல்வேன்,
என் காதலை !
என் எண்ணத்தை எழுத்தாக்கி,
ஏட்டில் வடித்துள்ளேன் !
பிடித்திருந்தால்,
மறந்துவிடு,
நண்பன் என்ற,
முகவரியை !
இல்லையேல்,
மறந்துவிடு,
இந்த நண்பனின்,
முகவரியை !

அவள்


எவ்வளவோ சிந்தித்தேன்,
கவிதையே வரவில்லை !!
அவளின் முகம் பார்த்தேன்,
சிந்திக்காமல் பிறந்தது,
கவிதை மட்டுமல்ல,
காதலும் தான் !!!

வரதட்சணை கொடுமை

மண்ணெண்ணெய் விலை
உயர்வு !
மாமியார்கள்
போர்க்கொடி !!!

Tuesday, May 5, 2009

கடல் பிடித்த மீன்கள் - சுனாமி


விடியக்கால எந்திரிச்சு,
விடியும் முன்னே தான் குளிச்சு,
பகவான கும்பிட்டு ,
படகோட்டி போனவர,
கரையோரம் நீன்னுகிட்டு,
கையசச்சு அனுப்பிவச்ச!
கைநெறய மீனோட,
கரையோரம் நான் வார,
கரை மட்டும் இருக்குதம்மா,
நான் கட்டுனவள,
காணலயே !
நெஞ்சில் வச்ச பிஞ்சுகளையும்,
நெக்குறுமாறு பண்ணிட்டு,
கடலம்மா வாங்கிடுசே,
என் விண்மீகள் போயிடுச்சே!
எங்கிருந்தோ வந்தாங்க,
வந்தவங்க சேர்ந்தாங்க,
சேந்தவங்க பிரியும் முன்னே,
சேந்தாப்ல அனுப்புச்சுட்டியே!
இனிமேலும் நாங்க தூங்கமாட்டோம்,
கரைய சும்மா விட மாட்டோம்,
அலையாத்தி மரங்களதான்,
அங்கெல்லாம் நட்டிடுவோம்!
இனியொரு தரம் நீ வந்தா,
வெத்தல பாக்கு வெக்க மட்டோம்,
வெறும் கையோட,
அனுப்பிடுவோம் !!!