Saturday, June 20, 2009

ஜாதகம்

பத்து பொருத்தம்,
பார்த்து,
பூ முடித்த,
பார்வதி அக்காவோ,
பதினோரம் நாள்,
பொட்டிழந்தாள்!
ஜோசியம் பார்க்கும்,
ஜானகியோ,
ஓடிப்போய் கட்டிக்கொண்டு,
ஒன்பது பிள்ளை பெற்றுவிட்டாள்!
ரேகையை நம்பாமல்,
உன் கைகளை நம்பு,
உன் உயர்வை,
உன்னாலும்,
தடுக்க முடியாது !!!

No comments:

Post a Comment