
மாதா , பிதா , குரு!
அந்த குருவிற்கே,
கண்ணாய் இருக்கும்,
புத்தகம் பேசுகிறேன்!
அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் பல,
நாட்டு நடப்புகள் பற்பல,
இவையெல்லாம் எனக்குள்,
பெருகி பொதிந்திருக்க,
அரை நிர்வாண அழகிகளையும்,
அவர் ஆபாச அங்கங்களையும்,
அங்கங்கே போட்டு,
தயவு செய்து,
வியாபாரம் ஆக்காதீர்!
இனி வரும்,
தலைமுறையினராவது,
என்னை,
படிப்பதற்காக மட்டும்,
பயன்படுத்தட்டும் !!!
No comments:
Post a Comment