Sunday, July 26, 2009

பிறந்தநாள் கொண்டாட்டம்


நள்ளிரவில்,
கேக் வெட்டி!
நண்பர்களிடம்,
அன்பளிப்பு பெற்று!
பெற்றவர்களின் ஆசியை,
போனில் பெற்று!
கோயில் வழிபாட்டோடு,
நித்தமும் கழிந்தது,
என்னுடைய பிறந்த நாள்கள்!
இவ்வருடமோ,
அன்பர்களுடன் இருப்பது போல்,
அருமையான பரிசு!
கண்ணாரக் கண்டேன்,
கலர் கலராய்,
கடல் மீன்கள்!
காட்டமான கோடையில்,
பனி மழைச்சாரல்!
சில சில்லறைகளில்,
சிம்லாவின் சீதோஷணம்!
இருபது நிமிடங்கள்,
இமாலயத்தில் இருந்திருந்தேன்!
இவ்வளவு,
இன்பங்களையும்,
இனிதே அளித்த,
என்னுயிர் நெஞ்சங்களுக்கு,
இதயம் கனிந்த,
நன்றிகள் !!!

பிச்சை பாத்திரம்


சோம்பேறிகளின்,
சொரூப சின்னம்!
தன்னம்பிக்கை அற்றவரின்,
அட்சய பாத்திரம்!
வெட்கமில்லா பல,
வீணர்களின்,
ஒரே முதலீடு!!!

Saturday, July 25, 2009

பள்ளிக்கூடம்


ஜனத்தொகை,
கட்டுப்படுத்த,
நாங்கள் கட்டும்,
கட்டிடம்!
பெருமளவில்,
பணம் குவிக்க,
நாங்கள் அமைக்கும்,
அடைச்சல் கூடம்!
காசை மட்டுமே,
குறி வைக்கும்,
ஒரு,
விலை உயர்ந்த,
இடுகாடு !!!

காணிக்கை

ஏங்கித் தவிப்போர்,
பலர் இருக்க,
நாம்,
இறைவனுக்கு,
அளிக்கும்,
அன்பளிப்பு !!!

பிரிவு


கேள்வி கேட்டால் எரிச்சல்!
சாப்பாட்டில் ஆயிரம் குறைகள்!
புத்தி சொன்னால் பொறுப்பதில்லை!
இன்றோ,
பேச ஆள் இல்லை!
சாப்டியா கண்ணா என்று,
விசாரிக்க நீ இல்லை!
மாசில்லா உன் அன்பு,
மடையனுக்கு,
இப்போது தான்,
புரிகிறது!
பிரிவு தான்,
உறவுகளை,
எடுத்துக் காட்டுமோ ???

செல்போன் டவர்



அழகான பறவைகளை,
அழிக்கும்,
அபாயகரமான,
அரக்கன் !!!


நம்,
நட்பை பலப்படுத்தும்,
உயிரில்லா,
உறவினன் !!!

நட்சத்திரம்


என்னவளே!
உன்னை எண்ணி,
உறங்க மறுத்த,
விழிகள்,
விண்ணின்,
வைரங்களை கணக்குப் போட,
உன் பால்,
என் அன்பு போல்,
அதுவும்,
எண்ண முடியாததே !!!

அருவி


பால் நிலவு,
பளிங்காய்,
உருகி வழிவது போல்,
பாறைகளில் பட்டு,
தெறிக்கும் நீர்,
பார்ப்பவர்,
கண்ணுக்கு,
பௌர்ணமி விருந்து !!!

ஆசிரியர்




அன்பு,
கவனிப்பு,
கண்டிப்பு!
மூன்றும் கலந்த,
முத்தான முதல்வன்!
நல்வழியில்,
நம்மை நடத்திச்செல்ல,
நாளெல்லாம்,
பாடுபடுபவர்!
நல்லதை மட்டுமே சொல்லி,
நம் சாபத்தை,
வாங்குபவர்!
கல்லுக்குள்ளும்,
ஈரம் உள்ளது போல்,
எல்லோர் மனதிலும்,
உண்மை,
உறைந்து கிடப்பது,
இவர் ஈட்டித்தந்த,
இமாலய வெற்றி !!!

மன்னிப்பு

மனிதனுக்கு,
மனிதன் தரும்,
மிகப்பெரிய,
தண்டனை !!!

பயம்


பிடிவாத குணம்!
பிள்ளை போன்ற மனம்!
காட்டாறு போல பாசம்!
பால் நிலவாய்,
பிரகாசிக்கும்,
அழகு!
எங்கே உன்னை,
காதலித்து விடுவேனோ என்று,
எனக்கும் கொஞ்சம்,
பயம் தான் !!!

அரசியல்வாதி



கை நிறைய பணம்!
பெரிய ஆள்,
என்ற கணம்!
போக வர பல கார்,
போதாதற்கு,
பங்களா வாசம்!
இதுவும் பத்தவில்லை,
எம் அமைச்சர்களுக்கு!
பிச்சை கேட்போரிடமும்,
பிடுங்கித் திண்ணும்,
பிணந்திண்ணிக் கழுகுகள்!
தன் வீட்டு,
கன்னியரைத் தவிர,
இன்ன பிற மங்கயரை,
காம பசியோடு பார்க்கும்,
பன்றிகள்!
சக மனிதரின்,
வயிற்றில் அடித்து வாழும்,
வெட்கமில்லா வீணர்கள்!
இன்னும் அடுக்க,
என் ஆயுளும் பத்தாது!
பாவப்பட்ட,
எம் மக்களுக்கு,
விமோசனம் கிடைப்பது தான்,
எப்போது ????

ஜன்னல்


எல்லோர்க்கும்,
சூர்யோதயம்,
கிழக்கில் தான்!
எனக்கு மட்டும்,
அது,
எதிர் வீட்டு,
ஜன்னலில் !!!

நாக்கு


அறுசுவை உணவை,
அறிவுக்கு,
அறிமுகப்படுத்தும்,
அன்னபட்சி!
இது,
பிறண்டாலும்,
புரண்டாலும்,
நஷ்டம்,
நமக்கு தான் !!!

இசை


அசைந்தாடும் காற்று!
மெல்லிய சாரல் மழை!
கடலின் சன்னமான,
சப்தம்!
கீற்று போல்,
இடியோசை!
தென்றலில் ஊஞ்சலாடி,
ரகசியம் பேசும்,
இலைகள்!
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்,
மூங்கில் பாடும்,
மெல்லிய கீதம்!
கேளுங்கள்!
எம் நாட்டு,
இயற்கையும்,
இன்னிசை பாடுவதை !!!

உதட்டுச் சாயம்


மென்மையான,
ரோஜா இதழ்களுக்கு,
காகித ரிப்பன்!
நித்தியமான,
நிலவிற்கு,
வர்ணப் பூச்சு !!!

Saturday, July 11, 2009

கண்ணாடி



சிற்பங்கள்,
செதுக்கியது முதல்,
சிதையும் வரை,
சிற்பமாக தான் உள்ளது!
ஓவியங்கள்,
ஒழியும் வரை,
ஒளிர்ந்து கொண்டு தான் உள்ளது!
காரணங்கள்,
பிம்பங்கள் காட்டும்,
கருவியில்,
தன்னைக் கண்டு,
கணம் கொள்வதில்லை!
தப்பு ஒளிந்துகொண்டிருப்பது,
கண்ணாடியில் இல்லை,
அவர்,
மனங்களில் தான்!!!

படிப்பு

மனிதர்களின்,
எழாவது அறிவு!
இது,
ஏழைகளுக்கு,
எட்டாத,
அறிவு!!!

மாநகர பேருந்து


அரசாங்கத்திடம்,
சம்பள உயர்வு
கேட்காமல்,
பென்ஷன் பணம்,
வாங்காமல்,
பதவி உயர்வு,
பார்க்காமல்,
தினமும் உழைக்கும்,
தேசிய வாகனம்!!!

மனைவி


கழுத்தில்,
நீ கட்டும்,
தாலியை சுமந்து!
வயிற்றில்,
உன் வாரிசை,
சுமந்து!
உன் துன்பங்களை,
தன் நெஞ்சில்,
சுமந்து!
இறுதி வரை,
உனக்காகவே வாழும்,
உன்,
இரண்டாம் தாய் !!!

மதம்

மனம் என்ற,
குரங்கிற்கு,
மனிதம் என்னும்,
மகத்துவம் சொல்லாமல்,
மதில் மேல்,
பூனையாய்,
அமர்த்தியிருக்கும்,
அபாய அணி!!!

திருமணம்


ஆண்டுக்கொரு அம்மா!
மகளையே,
மணக்கும் அப்பா!
என,
மேலை நாடு போலின்றி,
நம்,
கலாச்சாரத்தை,
கட்டி காக்கும்,
காவியம் !!!

வீடு



உயிரோட்டமான,
உறவுகளை,
உயிர்ப்பிக்கும்,
உறைவிடம்!!!

மௌனம்


பதினாறு மணிநேர வேலை!
பத்தாதற்கு,
மனதில்,
பல உளைச்சல்கள்!
இந்த சுமைகளை விட,
உன்,
மௌன சுமையை தான்,
தாங்க முடியவில்லை,
என்னால்!!!

சுமைகள்



மாநகர பேருந்து,
ஜன்னலோர பயணம்!
வெளியே விழி போட்டேன்,
விண்ணுயர்ந்த கட்டிடம்,
கட்ட வேண்டியதோ,
இன்னும் பாதி!
பத்து வயது சிறுமி,
தலையில் வைத்திருந்தாள்,
கற்கூடை ஒன்று!
கண்களில் வலி,
வயிற்றினில் பசி!
சுமைகள்!
அவள் தலையில்!!
என் இதயத்தில்!!!

Sunday, July 5, 2009

சமாதி


பர்வதம்!
பக்கத்து வீட்டு,
பாவப்பட்ட ஜீவன்!
கணவன் கைவிட,
கைத்தொழில் செய்து,
பெற்ற பிள்ளையை,
போராடி படிக்க வைத்து,
பரதேசம் அனுப்பியவள்!
பிள்ளையும் கைவிட,
பிச்சை எடுத்து,
பாழும் வயிற்றை கழுவியவள்!
இன்று ,
பரலோகம் போய்விட்டாள்!
அரை வயிறு,
சோறு போடாதவன்,
அவளுக்காக கட்டினான்,
சலவைக்கல்லில் ,
சமாதி ஒன்று!
இப்படித்தான்,
சமாதிகள்,
எங்கள் ஊரில்,
எழுகின்றன !!!

Saturday, July 4, 2009

மௌனம்

காதலர்களின்,
தேசிய கீதம்!

உனக்கானவர்களை,
தண்டிக்க உதவும்,
உன்னதமான,
கருவி!

இதயம்


நீ,
தலைப்பு சொல்லும்,
போதெல்லாம்,
என்,
தவிப்பையும்,
இணைத்து எழுதுவேன்!
இதயத்தை பற்றி,
எழுத சொன்னாய்!
எப்படி சொல்வது,
என்னில் இல்லை,
என்,
இதயம் என்று !!!

குப்பை தொட்டி


ஆயிரம் ஆண்டுகள்,
கழிவுகளை வாங்கியதால்,
அகத்தினில் தங்க,
வரமொன்று பெற்றேன்!
அதில் இருந்தது ஒன்று,
நாவில் வந்தது ஒன்று!
அய்யகோ!
எத்தனை பொய்கள்,
எத்தனை வஞ்சம்!
கொடிய எண்ணங்கள்,
இன்னும் எத்தனையோ!
வாங்கிய குப்பைகள்,
இன்னும் மணந்ததம்மா,
இந்த,
மனித பயல்களின்,
மக்கிய,
மனங்களை விட!!!!

ரோஜா


மனம் மயக்கும்,

மணம்!

விழி மயக்கும்,

வர்ணம்!

உன்னை,

சூடுவதால்தான்,

கன்னியரும்,

கவின் கொண்டனரோ!!!

தீ

மஞ்சள் பூதமே!
பொன்னை உருக்கி,
புடம் போட்டாய்!
சேற்றை சுட்டு,
பாண்டங்கள் செய்தாய்!
ஜோதியாய் நின்று,
தரிசனம் தந்தாய்!
உன்னுள் தான்,
முத்தேவர்களும்,
அடக்கமோ!!!

நாற்காலி


இதற்கென தனி பெருமை,
எப்போதும் உண்டு!
மாணவற்கு,
வாத்தியார் நாற்காலியில்,
ஆசை!
வீட்டினில்,
அப்பா இருக்கைக்கு,
இஷ்டம்!
அலுவலகத்தில்,
முதலாளி முக்காளி மீது,
மோகம்!
பலருக்கோ அரசியல்,
நாற்காலியில் தான்,
நாட்டமே!
பாவம்,
யாருக்கு தெரியும்,
நான்கு கால்,
இருக்கை தான்,
நமக்கு வாய்க்கும் என்று!!!

தாஜ்மஹால்


அந்த காலத்தில்,
கட்டியவளுக்காக,
சமாதி கட்டிய,
ஒரே காதலன்,
ஷாஜகான் மட்டும் தான்!
ஆனால்,
கட்டியவளையே,
சமாதி கட்டும்,
ஒராயிரம்,
ஷாஜகான்கள்,
எங்க காலத்தில் தான்,
உண்டு !!

ஏட்டினில் எழுதாத,
தூரிகையில் வரையாத,
சிற்பமாய் செதுக்காத,
கட்டிங்களால் ஆன,
கவின்மிகு காவியம் !!!

கோயில்

இன்றைய மக்கள்,
அக அழுக்குகளையும்,
புற குப்பைகளையும்,
கொட்டும்,
இடம் !!

உறவினர்கள்

வளர்ச்சி கண்டு,
வெம்புவரும் உண்டு!
உன் தோல்வி கண்டு,
தெம்பூட்டுபவரும் உண்டு!
துன்பத்தில்,
பாதரசமாய் இருந்து விட்டு,
இன்பத்தில்,
பசை போல்,
ஒட்டிக்கொள்வோரிடம்,
தாமரை இலை,
நீர் போல்,
தங்குவதே,
தந்திரம் !!

கடல்

தினம் தினம்,
பல உயிர்,
தின்றாலும்!
சுனாமியாய் சீறி,
கொன்றாலும்!
மெல்ல மெல்ல,
நிலங்களை,
தின்றாலும்!
தினம் என் வீட்டிற்கு,
ஆயிரம்,விருந்தினர்கள் !!

கண்ணீர்


புஜ,
பலம் மிக்க,
ஆண்களை கவிழ்க்கும்,
பெண்களின்,
கவசம் !!!

தண்ணீர்


பசியால்,
பரிதவிக்கும்,
பல எழைகளின்,
பல நாள் உணவு !!!

தாய் வயிற்றில்,
தங்கிய போது,
பனிக்குடமாய்,
என்னை காத்தாய்!
சிறு பிள்ளை,
தவழ்ந்த போது,
தொட்டியிலிருந்து என்னை,
அழைப்பாய்!
பாலகனாய்,
பவனி வந்தேன்,
மழையாய் என்னை,
மகிழ்வித்தாய்!
வாலிபனான போது,
அருவியாய் ,
ஆறாய் அணைப்பாய்!
தள்ளாமல் வந்த போது,
அலையாய் வந்து,
என் கால் தொட்டு செல்கிறாய்!
உனக்கெப்படி தெரிந்தது,
எனக்கு யாரும்,
இல்லை என்று !!!