Saturday, July 25, 2009

அரசியல்வாதி



கை நிறைய பணம்!
பெரிய ஆள்,
என்ற கணம்!
போக வர பல கார்,
போதாதற்கு,
பங்களா வாசம்!
இதுவும் பத்தவில்லை,
எம் அமைச்சர்களுக்கு!
பிச்சை கேட்போரிடமும்,
பிடுங்கித் திண்ணும்,
பிணந்திண்ணிக் கழுகுகள்!
தன் வீட்டு,
கன்னியரைத் தவிர,
இன்ன பிற மங்கயரை,
காம பசியோடு பார்க்கும்,
பன்றிகள்!
சக மனிதரின்,
வயிற்றில் அடித்து வாழும்,
வெட்கமில்லா வீணர்கள்!
இன்னும் அடுக்க,
என் ஆயுளும் பத்தாது!
பாவப்பட்ட,
எம் மக்களுக்கு,
விமோசனம் கிடைப்பது தான்,
எப்போது ????

1 comment:

  1. ஆதங்கங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிந்திருக்கலாமோ என்று தோன்றியது எனக்கு..

    ReplyDelete