Saturday, October 10, 2009

விழுதுகள்



தொல்லைகள் என,
பெற்ற பிள்ளைகள்,
கைவிட,
பூ விற்று விட்டு,
வழக்கம் போல்,
ஆல மரத்தில்,
சாய்ந்தாள் வள்ளி!
விழுதுகள் தாங்க,
தள்ளாத வயதிலும்,
மலை போல்,
வீற்றிருந்தது மரம்!
பெருமூச்சு அவளிடமிருந்து,
தன்,
விழுதுகளை எண்ணி !!!

No comments:

Post a Comment