Saturday, October 10, 2009

பயணம்

ஏம்பா,
மரம்லாம்,
பின்னாடி போகுது!
அறியா வயதில்,
அப்பாவிடம்,
கேட்டது முதல்,
சொந்த ஊரை,
பார்க்கும் சந்தோஷத்தில்,
பயணித்த நேரங்கள்!
மலைக்காற்று நேரத்தில்,
சே,
அதுக்குள்ள எறங்கனுமா?
என்று,
ஏங்க வைத்த,
நிமிடங்கள் வரை,
என்னூடே இணைந்திருக்கும்,
உருவில்லா தோழன் !!!

No comments:

Post a Comment