வைகறையில், தினமும் நடப்பது, வானத்திற்கு மட்டும் தான்! உலகத்தின் விடியல், உறங்கிக்கிடக்கிறது, ஏழைக் குழந்தையின், பட்டினியிலும், மொட்டிலேயே கருகும், பெண் சிசுவிலும் !!!
பள்ளி பருவத்தில், கல்லூரி காலத்தில், வாலிப வயதில், வரிசையாக, பல காதல், பண்ணிவிட்டு, பார்க்கும் பெண்களை, போக பொருளாய், கோவலனாய் உபயோகித்து விட்டு, கட்டுபவளை, கண்ணகி போல், எதிர்பார்ப்பது !!!
பல நிலங்கள், பல நூறு பிரிவுகள், பல்லாயிரம் தலங்கள், பல லட்சம் தொழில்கள், பல கோடி மக்கள், பெருமை மிகு, விஷயங்கள் தான், கட்டி காத்தவைகள், கட்டுண்டு, இருக்கும் வரை !!!
அரசியல் அசிங்கங்கள், அரங்கேறும் போது, பாவ சின்னம்! சீரிய செயல்கள், சிறக்கும் போது, பெருமித சின்னம்! தீட்சண்யமான திறமை, பிறக்கும் போது, கருவறை சின்னம் !!!
ஏம்பா, மரம்லாம், பின்னாடி போகுது! அறியா வயதில், அப்பாவிடம், கேட்டது முதல், சொந்த ஊரை, பார்க்கும் சந்தோஷத்தில், பயணித்த நேரங்கள்! மலைக்காற்று நேரத்தில், சே, அதுக்குள்ள எறங்கனுமா? என்று, ஏங்க வைத்த, நிமிடங்கள் வரை, என்னூடே இணைந்திருக்கும், உருவில்லா தோழன் !!!
என்னால் முடியாது, இது அவநம்பிக்கை! என்னால் தான் முடியும், இது தற்பெருமை! என்னாலும் முடியும், இது நம்பிக்கை! உன்னையும் முடிக்க செய்வேன், இது தன்னம்பிக்கை !!!
அறிவுக்காக, பொருள் இழப்பாய்! பொருளுக்காக, நலம் இழப்பாய்! நலனுக்காக, நேரம் இழப்பாய்! நேரத்திற்காக, சொந்தம் இழப்பாய்! இல்லாததை எண்ணி, மதி இழப்பாய்! அதனால், உன் வாழ்வையே, தொலைப்பாய் !!!
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, இஷ்டத்துடன், இங்கு வந்து, தொழு நோயாளிகளுக்கு, தோள் தந்து! அனாதைகளுக்கு, அன்பு தந்து! பிறருக்காகவே, வாழ்ந்து மடிந்த, மனித தெய்வம் !!!
தொல்லைகள் என, பெற்ற பிள்ளைகள், கைவிட, பூ விற்று விட்டு, வழக்கம் போல், ஆல மரத்தில், சாய்ந்தாள் வள்ளி! விழுதுகள் தாங்க, தள்ளாத வயதிலும், மலை போல், வீற்றிருந்தது மரம்! பெருமூச்சு அவளிடமிருந்து, தன், விழுதுகளை எண்ணி !!!
யாரிடமும் கற்காமல், யாவரும் இயற்றும், கலை இது! ஆருயிர் நண்பரிடத்தும், பெறமுடியா, விலை இது! முற்றும் துறந்தவர்க்கு, அற்பமான, சிலை இது! எரிமலையை விட, ஆபத்தான, மலை இது! உலக உடலுக்கு, உயிராய் இருக்கும், தலை இது !!!
பகட்டிற்காக, பல ஆயிரம் தந்து, பணம் படைத்தவர்கள், இதை மறைக்க! பல நாள், பட்டினி கிடந்து, பசி உணர்வே, மரத்து போன, பாவப்பட்ட ஜீவன்கள், இங்கு தான் அதிகம் !!!
பிள்ளைகளுக்கு ஒரே குஷி, தீபாவளி துணி வாங்க, கடைத்தெரு போவதால்! சின்னவன் கேட்ட உடைக்காக, புடவை கனவை, மனைவி மறந்தாள்! பெரியவள், தாவணி கனவிற்காக, என், சட்டை பேண்டை, தியாகம் செய்தேன்! இப்போது தான், உறைக்கிறது, என் அப்பா அம்மா, ஏன் புது உடையே, போடவில்லை என்று! நெஞ்சில், சுருக்கென்று வலி, சிறு வயதில், நான் வைத்த, செலவிற்காக !!!
எத்தனையோ வேலைகள், செய்வதற்கு பல செயல்கள், அத்தனை இருந்தாலும், எனக்கென சில நிமிடங்கள், அற்புதமான தலைப்புகள்! வியத்தகு விமர்சனங்கள்! எனக்குள் இருந்த, எண்ணங்களை, பிறரறிந்து, பாராட்டும் வகை செய்த நீ, எனக்கு வாய்த்த, மிக பெரிய, பரிசு !!!
குப்பன் தொடங்கி, குபேரன் வரை, குறையில்லாமல் குடியிருந்த, குடம் இது ! பாசம் என்ற, பசை கொண்டு! குருதி என்ற, நீர் கொண்டு! கவனிப்பு என்ற, கலவை கலந்து, அன்னை எழுப்பிய, அரண்மனை இது !!!
ஒரு மனதாக, இருவர் பேசிக்கொள்ளாமல், மூன்று முடிச்சு பந்தத்தை, நான்கு சுவர் தாண்டி, ஐந்தாம் மனிதர்களிடம், ஆறறிவு இல்லாமல், ஏழேழு ஜென்மத்திற்கும் சேர மாட்டோம் என்று, எட்டு திசைக்கும், முரசு கொட்டி சொல்லும், பரிகாச பத்திரம் !!!
வானமும், மேகமும் போல், எப்போதும் இணைந்திருப்போம் நாம்! நம், நிழல்கள் பிரிந்து கூட, யாரும் பார்த்ததுஇல்லை! என், சிறு கண்ணசைவிற்க்கும், அர்த்தம் தெரிந்தவள் நீ! காதலர்களாகவே எண்ணினர், நம்மை பார்க்கும் பலர்! மணப்பெண அண்ணனாக, உன்னை தாரைவார்த்த போது தான், அத்தனை கண்களிலும், எத்தனை ஏமாற்றம் !!!
குடம் குடமாய், பால் அபிசேகம்! கட்டி கட்டியாய், தங்க வேண்டுதல்! இத்தனை செய்தும், கருவறை கதவு, திறக்கவில்லை! கண்ணீருடன் பார்த்தேன், பசியில் அழுகின்றன, பல குழந்தைகள், எதிர் விடுதியில்! மனதில் ஒரு மின்னல்! எதிர் விடுதி, குழந்தைகளுக்கு, இப்போது, ஒரே அம்மா அப்பா !!!
என் குழந்தையின், வெற்றிக்கு காரணம், ராதா பால் !!! ஒரு கையில், குழந்தையுடனும், பாதி மார் தெரியுமாரும், சிரித்துக் கொண்டிருந்தாள், விளம்பர நடிகை! அம்மா, நீயும், இப்படியே டிரஸ் பண்ணிக்கோ! ஐந்து வயது குழந்தை, அறியாமல் சொன்னது! அம்மா பாசத்தையும், ஆபாசத்தையும், சேர்ந்து சொன்ன, விளம்பரத்தை பார்த்து !!!
அன்பு என்பது தூய்மை! அறிவு என்பது வாய்மை! துணிவு என்பது ஆண்மை! துறவு என்பது இறைமை! அடக்கம என்பது நேர்மை! அழகு என்பது தாய்மை! இவை அனைத்துக்கும் வேண்டியது பொறுமை! ஆனால், யாராலும், அது முடியாதது தான், உண்மை !!!
அன்னையாய் அரவணைத்து! தாரமாய் தன்னை தந்து! மகளாய் மகிழ்வு தந்து! தோழியாய் தெம்பூட்டும், இந்த இனியவளுக்கு, இட ஒதுக்கீடு, முப்பத்து மூன்று தானாம்! மடையர்களே! இம் முதல், மூவரும் இல்லாவிடில், உம் மூன்று வாழ்க்கையும், வெறுமை தான் !!!
எதிர் வீட்டில், ஏக கூச்சல்! கலப்பு மணம் செய்த மகளை, கொன்று விட்டாராம் தந்தை! இந்த காலத்தில், இப்படியும் ஒரு மனிதரா ?? எட்டி பார்த்தால் தான், தெரிகிறது! தன் மகள், கொணர்ந்தது, தனக்கு ஒரு, மருமகளை என்று! இந்த காலத்தில், இப்படியும் , சில மனிதர்கள் !!!
அரை டிரவுசர் பருவம்! பக்கத்து இருக்கை! எப்போதும் பத்து விரல்கள், என் வலது கையில்! காக்காய் கடி கடித்து, கடைவாயில் விழும், மிட்டாய்கள்! பரிமாறிக்கொண்ட, மதிய உணவுகள்! வார்த்தை அறியாவிட்டாலும், வலி தீர்த்த, கண்ணீர் துளிகள்! ஐந்து வயதில் தெரியவில்லை, இதுவும், காதலென்று!!!
ஜனத்தொகை, கட்டுப்படுத்த, நாங்கள் கட்டும், கட்டிடம்! பெருமளவில், பணம் குவிக்க, நாங்கள் அமைக்கும், அடைச்சல் கூடம்! காசை மட்டுமே, குறி வைக்கும், ஒரு, விலை உயர்ந்த, இடுகாடு !!!
கேள்வி கேட்டால் எரிச்சல்! சாப்பாட்டில் ஆயிரம் குறைகள்! புத்தி சொன்னால் பொறுப்பதில்லை! இன்றோ, பேச ஆள் இல்லை! சாப்டியா கண்ணா என்று, விசாரிக்க நீ இல்லை! மாசில்லா உன் அன்பு, மடையனுக்கு, இப்போது தான், புரிகிறது! பிரிவு தான், உறவுகளை, எடுத்துக் காட்டுமோ ???
பிடிவாத குணம்! பிள்ளை போன்ற மனம்! காட்டாறு போல பாசம்! பால் நிலவாய், பிரகாசிக்கும், அழகு! எங்கே உன்னை, காதலித்து விடுவேனோ என்று, எனக்கும் கொஞ்சம், பயம் தான் !!!
கை நிறைய பணம்! பெரிய ஆள், என்ற கணம்! போக வர பல கார், போதாதற்கு, பங்களா வாசம்! இதுவும் பத்தவில்லை, எம் அமைச்சர்களுக்கு! பிச்சை கேட்போரிடமும், பிடுங்கித் திண்ணும், பிணந்திண்ணிக் கழுகுகள்! தன் வீட்டு, கன்னியரைத் தவிர, இன்ன பிற மங்கயரை, காம பசியோடு பார்க்கும், பன்றிகள்! சக மனிதரின், வயிற்றில் அடித்து வாழும், வெட்கமில்லா வீணர்கள்! இன்னும் அடுக்க, என் ஆயுளும் பத்தாது! பாவப்பட்ட, எம் மக்களுக்கு, விமோசனம் கிடைப்பது தான், எப்போது ????
சிற்பங்கள், செதுக்கியது முதல், சிதையும் வரை, சிற்பமாக தான் உள்ளது! ஓவியங்கள், ஒழியும் வரை, ஒளிர்ந்து கொண்டு தான் உள்ளது! காரணங்கள், பிம்பங்கள் காட்டும், கருவியில், தன்னைக் கண்டு, கணம் கொள்வதில்லை! தப்பு ஒளிந்துகொண்டிருப்பது, கண்ணாடியில் இல்லை, அவர், மனங்களில் தான்!!!
கழுத்தில், நீ கட்டும், தாலியை சுமந்து! வயிற்றில், உன் வாரிசை, சுமந்து! உன் துன்பங்களை, தன் நெஞ்சில், சுமந்து! இறுதி வரை, உனக்காகவே வாழும், உன், இரண்டாம் தாய் !!!